ஆண்ட்ராய்டு ஒன்: நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Nokia 2.2 launched: Key specs, features, price in India and everything you need to know

by SAM ASIR, Jun 8, 2019, 09:44 AM IST

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிக்கென பிரத்யேக பொத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2.2 ஸ்போர்ட்ஸ் போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 5.71 அங்குலம்; ஹெச்டி தரம்; 19:9 விகிதாச்சாரம்; வாட்டர்டிராப் நாட்ச்

பிராசஸர்: 2 GHz மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்

இயக்கவேகம்: 2 ஜிபி RAM மற்றும் 3 ஜிபி RAM இருவகை

சேமிப்பளவு: 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இருவகை

பின்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்டது எல்இடி பிளாஷ்

முன்பக்க காமிரா: 5 எம்பி தற்பட (செல்ஃபி) காமிரா

பேட்டரி: 3000 mAh

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு ஒன் / ஸ்டாக் ஆண்ட்ராய்டு பை
ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு வசதிக்கென பக்கவாட்டில் ஒரு பொத்தான் உள்ளது. குறைந்த ஒளி உள்ள இடங்களிலும் புகைப்படம் எடுக்கக்கூடிய தொழில்நுட்பம் கொண்டது.

2 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 16 ஜிபி சேமிப்பளவு கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையிலும், 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.7,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால சலுகைக்குப் பின்னர் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா தளத்தில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தாலும் கடைகளிலும் ஃபிளிப்கார்ட்டிலும் ஜூன் 11ம் தேதி முதல் நோக்கியா 2.2 போன் கிடைக்கும்.

ஜியோ பயனர்களுக்கு ரூ,2,200 உடனடி பண சலுகையும் ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ்க்கு 100 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. பண சலுகை ரூ.50 மதிப்புள்ள 44 கூப்பன்கள் மூலம் கொடுக்கப்படும்.

You'r reading ஆண்ட்ராய்டு ஒன்: நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை