அமேசான் தளத்தில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் அமேசான் ஃபேப் போன் பெஸ்டிவல் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஐபோன் எக்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனையாக உள்ளன.
8 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 128 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ரூ.41,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அமேசான் விற்பனை திருவிழாவில் இது ரூ.27,999 விலையில் கிடைக்க உள்ளது. அறிமுக விலையில் ரூ.14,000 குறைத்து விற்பனை செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 6டி, அமேசான் கோடை சிறப்பு விற்பனையின்போது ரூ.29,999 விலையில் விற்பனையானது.
சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஸோமி ரெட்மி ஒய்3 போனும் விற்பனை திருவிழாவில் இடம்பெற உள்ளது. பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வந்தபோது சாம்சங் கேலக்ஸி எம்30 போன் ரூ.14,000 விலையில் விற்பனையானது. இதற்கு சிறப்பு மாதாந்திர தவணை (no cost EMI) மற்றும் எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.10,150 வரை சலுகை ஆகியவற்றையும் அமேசான் அறிவித்துள்ளது. ஆரம்ப விலை ரூ.10,990 என்று அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்20, இவ்விற்பனையில் ரூ.9,990 விலையில் கிடைக்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸின் ஆரம்ப விலை ரூ.91,900. இது இதுவரையில்லாத அளவு சலுகைவிலையில் அமேசான் போன் விற்பனை திருவிழாவில் கிடைக்கவுள்ளது.
இது தவிர சாம்சங் கேலக்ஸி நோட் 9, விவோ நெக்ஸ், ஃபோவாய் பி30 ப்ரோ (Huawei P30 Pro) மற்றும் ஆப்போ ஆர்17 உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் அமேசான் ஃபேப் போன் பெஸ்டிவலில் சிறப்பு சலுகைகளுடன் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஜூன் 10 முதல் 13 வரை நான்கு நாள்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த விற்பனையில் விரும்பிய ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கி பயன்பெறலாம்.