பேபால் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் ஹைதராபாத்தில் அமைகிறது

PayPal: Global centre in Hyderabad

by SAM ASIR, Jul 25, 2019, 19:05 PM IST

மின்னணு பண பட்டுவாடா நிறுவனமான பேபால் இந்தியாவில் தனது மூன்றாவது தொழில்நுட்ப மையத்தை ஹைதராபாத் நகரில் அமைக்க உள்ளது.

அமெரிக்க நிறுவனமான பேபால், அங்குள்ள பங்குச் சந்தையான நாஸ்டாக்கின் பட்டியலில் இடம்பெற்றதாகும். இந்தியாவில் பேபால் மையங்கள் சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இணைய மோசடிகளை தடுக்கக்கூடிய சிமிலிட்டி என்ற நிறுவனத்தை பேபால் கடந்த ஆண்டு வாங்கியது.

அதை தொடர்ந்து தற்போது ஹைதராபாத் நகரில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு பண பட்டுவாடா குறித்த நவீன தொழில் நுட்ப சேவைகளை அளிப்பதோடு, இடர் மேலாண்மை மற்றும் செயல்பாடுகளையும் இம்மையம் கண்காணிக்கும். சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்கள் இணைய மோசடி நடவடிக்கைகளை இனங்கண்டு பாதுகாத்துக் கொள்வதற்கான இடர் மேலாண்மை மற்றும் இயந்திரவழி கற்றல் உதவிகளை இம்மையம் வழங்கும்.

மின்னணு பண பட்டுவாடா விஷயத்தில் இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் இலக்குகளை எட்டுவதற்காக வணிக நிறுவனங்கள் புது யுக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பட்டுவாடாவை பாதுகாப்பாக செய்வதற்கான உதவிகளை இம்மையம் வழங்கும் என பேபால் இந்திய நிறுவனத்தின் துணை தலைவர் குரு பட் தெரிவித்துள்ளார்.

You'r reading பேபால் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் ஹைதராபாத்தில் அமைகிறது Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை