உங்க ஸ்டைலுக்கு எந்த லேப்டாப் பொருந்தும் தெரியுமா?

Best laptops that suit for your lifestyle

by SAM ASIR, Jul 31, 2019, 18:13 PM IST

மாணவர்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கான கணினியாக ஏஸர் அஸ்பயர் 3 கூறப்படுகிறது. குவாட்கோர் ரெய்ஸன் ஏபியூ (2500யூ) கொண்ட இந்த மடிக்கணினி 8 ஜிபி RAM இயக்கவேகம் கொண்டதாகும். சிறப்பான செயல்திறன் கொண்ட இது, பல்வகை பயன்பாட்டுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும்.

ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 9 மணி நேரத்துக்கு செயல்படக்கூடிய திறன் மின்கலத்திற்கு (பேட்டரி) இருப்பதாக ஏஸர் நிறுவனம் கூறுகிறது. முனை வரைக்கும் காட்சிப்படுத்தக்கூடிய திரை தொழில்நுட்பம் கொண்டது. எடுத்துச் செல்ல வசதியாக எடை குறைவானதாகும். இது மாணவர்களுக்கு ஏற்றது.

விளையாட்டு பிரியர்களுக்கு

கணினி விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருத்தமான மடிக்கணினி எம்எஸ்ஐ கேமிங் ஜிஎல்63. இவ்வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக கிடைக்கக்கூடிய கேம் கணினி இது மட்டுமே. இன்டல் கோர் ஐ7-8750 ஹெச் பிராசஸர் மற்றும் என்விடியா ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1660 Ti கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட் கொண்டது. இ-ஸ்போர்ட்ஸ்க்கு ஏற்ற 120 Hz புத்தாக்க வேகம் கொண்டது.

அதிதீவிர விளையாட்டு பிரியர்களுக்கு

விலைக்கேற்ற மதிப்பு கொண்ட கேமிங் மடிக்கணினி ஹெச்பி ஓமன் எக்ஸ் 2 எஸ் ஆகும். ஒன்பதாம் தலைமுறை கோர் ஐ7 உடன் என்விடியா ஆர்டிஎக்ஸ் 2070 கிராபிக்ஸ் கார்டு இதில் இருப்பதால் இடையறா விளையாட்டு இன்பம் தரக்கூடியது. மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பு இதில் உள்ளது. 15.6 அங்குலம் 144 Hz ஐபிஎஸ் எல்சிடி மற்றும் 6 அங்குல 1080 பி என்ற தொடுதிரை ஆகிய இரண்டு திரைகளை கொண்டது.
அதிதீவிர விளையாட்டு பிரியர்களுக்கான ஏனைய மடிக்கணினிகள் அஸூஸ் ஆர்ஓஜி ஸ்டிரைக்ஸ் ஸ்கார் III ஆகும். இதில் இரண்டு திரைகள் இல்லையென்றாலும் புத்தாக்க வேகம் 240 Hz இருப்பது சிறப்பாகும்.

பிசினஸ் செய்பவர்களுக்கு

தொழில், வணிகம் செய்பவர்களுக்கு ஏற்றவாறு சந்தையில் கிடைக்கும் மடிக்கணினி எல்ஜி கிராம் ஆகும். இது சற்று கனமாக தோன்றும். ஆனால் சிறப்பம்சங்கள் பல அடங்கியது. ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 20 மணி நேரம் வரைக்கும் மின்கலத்தில் (பேட்டரி) மின்சாரம் இருக்கும்.

தொழில்முறை படைப்புலகம் சார்ந்தோருக்கு

கிரியேடிவ் என்னும் படைப்புலகம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஏற்றது ஹெச்பி என்வி எக்ஸ்360 மடிக்கணினியாகும். செயல்திறன் மிக்க இக்கணினியை எடுத்துச் செல்வதும் எளிதாகும். தினசரி வேலைகள், பொழுதுபோக்கு சார்ந்த மென்பொருள்கள், படைப்புத்திறன் தொடர்பான துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஏற்றது என்வி எக்ஸ்360 ஆகும்.

ரெய்ஸன் 5 2500 சிபியூ மற்றும் ரேடியான் வேகா 8 ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். தொழில்முறை வல்லுநர்களுக்கு ஏற்றது எக்ஸ்360 லேப்டாப் ஆகும்.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை