இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சேமிப்பது எப்படி?

by SAM ASIR, Aug 3, 2019, 17:09 PM IST

இன்ஸ்டாகிராம், புகைப்படங்களை பகிரக்கூடிய செயலியாகும். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதோடு தற்போது செய்திகள் மற்றும் விற்பனை தகவலும் பகிரப்படுகிறது. நாம் விரும்பும், வெறுக்கும், பார்த்து பார்த்து சிரிக்கும் புகைப்படங்களே பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் நிறைந்திருக்கும். பிரச்னை என்னவென்றால், இன்ஸ்டாகிராமிலிருந்து படங்கள் அல்லது வீடியோக்களை நேரடியாக ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் சேமிக்க இயலாது.

இன்ஸ்டாகிராம் பதிவுகளை குறித்து வைக்கக்கூடிய (புக் மார்க்) வசதி இருப்பினும் மற்ற செயலிகளின் செய்வதுபோல வலப்பக்கம் சொடுக்கி (ரைட் கிளிக்) படத்தை சேமிக்க இயலாது. ஆனால், இன்ஸ்டாகிராமிலிருந்து படங்களை சேமிக்க சில வழிகள் உள்ளன.
இன்ஸ்டாகிராமிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு படங்களை சேமிக்க:

இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள தன்விவர (ப்ரொஃபைல்) குறியீடை சொடுக்கவும்.
செயலியின் வலப்பக்கம் மேலே உள்ள ஹாம்பர்கர் மெனுவை சொடுக்கவும்
செயலியின் கீழே வலப்பக்க மூலையில் உள்ள அமைப்பு (செட்டிங்ஸ்) தெரிவின்மேல் சொடுக்கவும்

பின்னர் கணக்கு (அக்கவுண்ட்) தெரிவின்மேல் சொடுக்கவும்
அடுத்ததாக திறக்கும் பட்டியில் (மெனு) ஆண்ட்ராய்டு பயனர்களாக இருந்தால் உண்மை பதிவு (ஒரிஜினர் போஸ்ட்) என்ற தெரிவின்மேலும் ஐஓஎஸ் பயனர்களாக இருந்தால் உண்மை புகைப்படங்கள் (ஒரிஜினல் போட்டோ) என்ற தெரிவின்மேலும் சொடுக்கவும்.
இந்த பொத்தானை பயன்படுத்தி செயல்பாட்டை முன்னெடுக்கலாம்.
இந்த வழிமுறையை கடைபிடித்தால் இன்ஸ்டாகிராம் கணக்கில் நீங்கள் செய்யும் பதிவுகள், பகிரும் படங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைக்கப்படும்.
இன்ஸ்டாகிராமிலிருந்து மேசைக்கணினியில் படங்களை சேமிக்க:

உங்கள் மேசைக்கணினி அல்லது மடிக்கணினியில் இன்ஸ்டாகிராமை திறக்கவும்
நீங்கள் சேமிக்க விரும்பும் படத்தினை திறக்கவும் படத்தின் இடப்பக்க மூலையில் மேலே உள்ள மூன்று புள்ளிகள் மேல் சொடுக்கவும் பதிவுக்குச் செல்லவும் (கோ டூ த போஸ்ட்) என்ற தெரிவின்மேல் சொடுக்கவும் வலப்பக்கம் சொடுக்கி (ரைட் கிளிக்) பக்கத்தின் மூலத்தை காண்க (வியூ பேஜ் சோர்ஸ்) என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும்

விண்டோஸ் இயங்குதள கணினி என்றால் Ctrl+F மேக் கணினியாக இருந்தால் Command+F என்ற கட்டளைக்குப் பிறகு தேடுதல் பட்டியில் '.jpg என்று தட்டச்சு செய்யவும்
இப்போது குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கும் (ஹைலைட்) முதல் .jpg குறிக்கு செல்லவும்
https://instagram. என்று தொடங்கி .jpg என்று முடியும் நிரலை முழுவதும் தெரிவு செய்து copy செய்யவும். அதை புதிதாக tab திறந்து அதில் paste செய்யவும்.

இப்போது சேமிக்க வேண்டிய படத்தின்மேல் வலப்பக்கம் சொடுக்கி (ரைட் கிளிக்) 'என்று சேமிக்கவும்' 'save as' என்ற கட்டளைப்படி உங்கள் கணினியில் சேமிக்கவும்.

பிரதமரின் இல்லத்திற்கு தோழியுடன் செல்வாரா ஜான்சன்? பிரிட்டனில் இப்படியொரு சர்ச்சை...


Leave a reply