கூகுள் மீட்: தொலை கருத்தரங்க செயலி பயனருக்கு சில வழிகாட்டுதல்கள்

google meet users guidelines

by SAM ASIR, Aug 23, 2020, 13:41 PM IST

கூகுள் நிறுவனத்தின் தொலை கருத்தரங்க செயலியான கூகுள் மீட் (Google Meet) லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள், சமுதாய அமைப்புகளின் சந்திப்புகள் நடத்துவோருக்கு இது பேருதவியாக இருந்து வருகிறது. நாள்தோறும் 30 லட்சம் பயனர்கள் இதைப் புதிதாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

பின்னணியைக் கவனியுங்கள்:

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கூகுள் மீட் நடத்தும்போதும் குறைவான வெளிச்சத்திலும் கூடிய அளவு தெளிவாகக் காட்சி அமையும்படி திறன் கூட்டப்படுகிறது. கூட்டம் அல்லது கருத்தரங்கை நடத்தும்போது பேசுபவரின் ஆளுமை அல்லது மனநிலைக்குப் பொருந்தக் கூடிய பின்னணியைத் தெரிவு செய்வது நல்லது என்று ஆலோசனை கூறும் கூகுள் நிறுவனம், பின்னணியை மங்கலாக்குவதற்கான அல்லது பயனர் தெரிவு செய்யும் காட்சியைப் பின்னணியாக வைப்பதற்கான வசதியை வரும் மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பங்கேற்பாளர்களைப் பார்த்தல்

கூகுள் மீட் செயலியில் கருத்தரங்கில் தற்போது எதையாவது காட்சிப்படுத்தும்போது (present) ஒரே சமயத்தில் 16 பங்கேற்பாளர்களைக் காணும் வசதி உள்ளது.
பேசுபவர் தன்னோடு கூட 49 பங்கேற்பாளர்களைப் பார்க்கும் வசதியை வழங்குவதற்கும் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பாக்ஸ்

கூகுள் மீட் செயலியில் கருத்தரங்கைத் தொடங்குவதற்கு அல்லது பங்கேற்பதற்கு ஜிமெயில் இன்பாக்ஸை விட்டு வெளியே வர வேண்டிய அவசியமில்லை. ஜிமெயிலின் பக்கப்பட்டியில் (sidebar) Start a meeting அல்லது Join a meeting என்பவற்றைத் தெரிவு செய்து, கருத்தரங்கை ஆரம்பிக்கலாம் அல்லது கருத்தரங்கில் இணைந்து கொள்ளலாம். அங்கிருந்து மற்றவர்களை இணையும்படி அழைக்கலாம்.

போனும் கணினியும்

ஜி சூட் பயனர்கள், வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள அல்லது எதையாவது காட்சிப்படுத்தக் கணினியின் காமிராவையும் வெப் பிரௌசரையும் பயன்படுத்தலாம்; அதேவேளையில் ஒலிக்கு (audio) போனை பயன்படுத்தலாம்.கூட்டத்தில் காட்சிப்படுத்தும்போது, முழு திரையை அல்லது குறிப்பிட்ட விண்டோவை அல்லது பிரௌசரின் குறிப்பிட்ட பக்கத்தைக் காட்ட இயலும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

You'r reading கூகுள் மீட்: தொலை கருத்தரங்க செயலி பயனருக்கு சில வழிகாட்டுதல்கள் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை