தமிழில் இ-மெயில் அனுப்பும் டேட்டா மெயில் - பி.எஸ்.என்.எல் புதிய வசதி

by Loganathan, Sep 12, 2020, 21:19 PM IST

தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்க, இணையதளம் மூலம் கணிப்பொறியிலும், ஆண்டராய்டு ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், டேட்டா மெயில் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப முறைகள்
இதில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என ஒன்பது மொழிகளில் இ-மெயில் முகவரியை உருவாக்கலாம்.
மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து விரும்பிய மொழிகளில், விரும்பிய பெயருடன் – இ-மெயில் முகவரியை உருவாக்கலாம்.


கூடுதல் சிறப்பு அம்சமாக ரேடியோ என்ற தனிப்பிரிவு உள்ளது. கணக்கு துவங்குவோர், இப்பிரிவுக்குள் சென்று விருப்பமான பெயரில் ரேடியோ சேனல் துவக்கலாம். இதன் மூலம், தங்களது குரலில் செய்தி உட்பட எத்தகையை கருத்துகளையும் பேசி ஒலிப்பரலாம்.
சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.

READ MORE ABOUT :

More Technology News