ஸோமி நிறுவனத்தின் ரெட்மி 9 வரிசையில் ரெட்மி 9ஐ ஸ்மார்ட் போன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ரெட்மி பிரீமியம் போன் வரிசையில் ரெட்மி 9ஐ போனும் இணைந்துள்ளது. பெரிய பேட்டரி, பின்புறம் ஒற்றை காமிராவுடன் ஆக்டோகோர் மீடியாடேக் பிராசஸரை இது கொண்டுள்ளது.
ரெட்மி 9ஐ சிறப்பம்சங்கள்
தொடுதிரை : 6.53 அங்குலம் எச்.டி. (720X1600 பிக்சல்) தரம்
இயக்கவேகம் : 4 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)
முன்புற காமிரா : 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி ஆற்றல் கொண்ட ஒரு காமிரா
பிராசஸர்: மீடியாடேக் ஹீலியோ ஜி25 ஆக்டோகோர்
மின்கலம்: 5000 mAh ஆற்றல்
பரிமாணம் : 164.9X77.07X9 மிமீ
எடை: 194 கிராம்
64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.8,299 விலையிலும் 128 ஜிபி கொண்ட போன் ரூ.9,299 விலையிலும் கிடைக்கும். மிட்நைட் பிளாக், சீ புளூ, நேச்சர் கிரீன் ஆகிய வண்ணங்கள் உள்ளன.செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், மி நிறுவன இணையதளங்கள் மூலமாகவும் மி ஹோம் விற்பனையகங்களிலும் வாங்கலாம்.