பேடிஎம் மூலம் எளிதாக சேவை பெறக்கூடிய 300 செயலிகள்: அதிரடி ஆப் ஸ்டோர்.

300 processors that can be easily serviced by Action App Store

by SAM ASIR, Oct 5, 2020, 20:47 PM IST

பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் என்ற மொபைல் இணையதளத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடிய இந்த ஸ்டோர், இந்தியாவை சேர்ந்த செயலி வடிவமைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஆப் ஸ்டோர், தெரிந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் செப்டம்பர் மாதம் பீட்டாவில் இயங்கியது. அம்மாதம் மட்டும் 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை நீக்கி பின்னர் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

டெகத்லான், ஓலா, பார்க்+, ராபிடோ, நெட்மெட்ஸ், 1எம்ஜி, டோமினோஸ் பிஸ்ஸா, ஃப்ரெஷ்மெனு, நோபுரோக்கர் உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட செயலி அடிப்படையிலான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே பேடிஎம் மினி ஆப் ஸ்டோரில் இணைந்துள்ளன.பேடிஎம் வாலெட், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, யூபிஐ, இணையவழி பரிவர்த்தனையான நெட்பேங்கிங் மற்றும் கார்டு வழி பரிவர்த்தனைகளை இதில் எளிதாக மேற்கொள்ளலாம். பேடிஎம் வாலெட், பேடிஎம் பேமெண்ட் வங்கி மற்றும் யூபிஐ இவற்றில் கட்டணமில்லாமல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். கிரடிட் கார்டு போன்ற ஏனைய முறைகளுக்கு 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.

சிறு வடிவமைப்பாளர்கள் குறைந்த செலவில், எளிதாக எச்டிஎம்எல் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மினி செயலிகளை உருவாக்குவதற்கு பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் ஆதரவளிக்கும். இதற்கென தனியாக எதையும் பதிவிறக்கம் செய்யாமல் எளிதாக பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.பேடிஎம் கிரிக்கெட் லீக் நடத்தியதற்காக அதை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள் நிறுவனம், ஸொமோட்டோ பிரீமியர் லீக் நடத்தியதற்காக அந்நிறுவனத்திற்கும், மேட்ச் டே மேனியா என்ற விளையாட்டை நடத்தியதற்காக ஸ்விக்கி நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து ஸொமோட்டோவும் ஸ்விக்கியும் தற்காலிகமாக அவ்விளையாட்டுகளை நிறுத்தி வைத்துள்ளன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Technology News

அதிகம் படித்தவை