சிக்னல் செயலியை பயன்படுத்தப்போகிறீர்களா? இவற்றைத் தெரிந்து கொள்ளுங்க!

by SAM ASIR, Jan 14, 2021, 20:32 PM IST

வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்கிரீன் லாக்

உங்கள் ஸ்மார்ட்போனிலுள்ள சிக்னல் செயலியை யாரும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு செட்டிங்ஸ் பிரிவிலுள்ள ஸ்கிரீன்லாக் என்ற அம்சத்தை பயன்படுத்தவும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி தங்கள் செயலியை பூட்ட முடியும்.சிக்னல் செட்டிங்ஸ்>பிரைவசி>ஸ்கிரீன் லாக் என்ற வழிமுறையை பயன்படுத்தி இவ்வசதியை செயல்படுத்தலாம்.

பதிவு குறியீடு

வாட்ஸ்அப்பின் இரண்டு படி உறுதிப்பாட்டை போன்றது பிரிரிஜிஸ்டிரேஷன் PIN ஆகும். இந்த PIN நீங்கள் மாற்றாவிட்டால் அப்படியே தொடரும். சிக்னல் செயலியை மறுபடியும் நிறுவும் அவசியம் ஏற்பட்டால் அல்லது பேக்அப் மற்றும் தரவுகளை மீட்பதற்கு இந்த PIN கண்டிப்பாக தேவைப்படும்.சிக்னல் செட்டிங்ஸ்>பிரைவசி>ரிஜிஸ்ட்ரேஷன் PIN
குறிப்பிட்ட அரட்டையை 'பின்' செய்தல் சிக்னல் செயலியில் ஸ்டார்டு மெசேஜ் என்னும் வசதி இல்லை. ஆனால், பதிவுகளை மேலே 'பின்' (Pin) செய்து வைக்கும் வசதி உள்ளது. நான்கு செய்திகள் வரை இப்படி 'பின்' செய்யலாம். குழுக்களிலும் (groups) இவ்வசதியை பயன்படுத்த முடியும். ஆனால் 'பின்' செய்யப்பட்ட செய்தியை அழித்தால், 'பின்' செய்யப்பட்ட இடத்திலும் அழிந்துவிடும்.

சாட்டை அழுத்தி பிடிக்கவும்>ரிபன் மெனுவின் மேலே உள்ள PIN ஐகானைஅழுத்தவும்
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களும் சிக்னலும்உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் சிக்னல் செயலியை தரவிறக்கம் செய்தால் உங்களுக்கு ஓர் அறிவிக்கை வரும். இது தொல்லையாக தெரியும். இதை தவிர்க்க இந்த அம்சம் செயல்படுவதை நிறுத்திவைக்கலாம். செட்டிங்ஸ்>நோட்டிஃபிகேஷன்ஸ்>கான்டாக்ட் ஜாயிண்ட் சிக்னல்>டர்ன் ஆஃப்

முகங்களை அழித்தல்

ஒரு படத்தை அனுப்புவதற்கு முன்பு முகங்களை தெளிவில்லாத தோற்றத்திற்கு மாற்ற சிக்னல் செயலி பயனர்களை அனுமதிக்கிறது.
சாட் விண்டோவை திறக்கவும்>ஏதாவது ஒரு படத்தை தெரிவு செய்யவும்>பிளர் (blur) என்ற ஐகானை அழுத்தவும்.

படங்கள் தாமாக அழிதல்

ஒரு படம் ஒரு முறை மட்டுமே பார்க்கப்படும் வசதியை பயன்படுத்த முடியும். யாருக்கு அனுப்புகிறோமோ அவர் ஒருமுறை பார்த்தபிறகு அந்தப் படம் அனுப்பியர், பெற்றவர் இருவருக்கும் தானாகவே அழிந்துவிடும்.அனுப்பக்கூடிய படத்தை தெரிவு செய்யவும்>இன்ஃபினைட் ஐகானை அழுத்தவும்>1X என்ற வசதியை தெரிவு செய்யவும்.

தொடர்புகளை பரிசோதித்தல்

முக்கியமான தகவல்களை கையாளும் பயனர்கள், தாங்கள் அவற்றை இன்னொருவருக்கு அனுப்பும் முன்பு அவர்களை பரிசோதித்து உறுதி செய்யும் கொள்ளும்படி சிக்னல் செயலி அறிவுறுத்துகிறது. இது என்கிரிட் முறையில் செய்திகளை அனுப்புவதுடன் இன்னொரு படி பாதுகாப்பை அளிக்கிறது.

சாட் விண்டோவை திறக்கவும்>தொடர்பு பட்டியலில் தொடர்பாளர்களின் பெயரை அழுத்தவும்>பாதுகாப்பு எண்ணை பார்க்கவும்.இப்போது மற்ற நபரின் சாதனத்தோடு எண்ணை இணைக்கவும் அல்லது அவர்கள் போனில் தெரியும் QR Codeஐ ஸ்கேன் செய்யவும்.

இன்காக்னிடோ (incognito) கீபோர்டு

நீங்கள் சிக்னல் செயலியை பயன்படுத்தும்போது விசைப்பலகை செயலிகள் (Keyboard apps) வார்த்தைகளை படிப்பதை தடுக்கும்படி இந்த அம்சம் கேட்கும். இவ்வசதி விசைப்பலகைகள் தரவுகளை சேகரிப்பதை தடுப்பதோடு தரவு தனியுரிமையை மேம்படுத்தும்.

You'r reading சிக்னல் செயலியை பயன்படுத்தப்போகிறீர்களா? இவற்றைத் தெரிந்து கொள்ளுங்க! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை