ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பயன்படும்வண்ணம் புதிய வசதிகளை (டூல்) கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் கிளாஸ்ரூம் மற்றும் ஜிமீட் செயலிகளில் 50 புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
கிளாஸ்ரூம் செயலியில் ஆஃப்லைன் வசதி
கிளாஸ்ரூம் ஆண்ட்ராய்டு செயலியில் ஆஃப்லைன் வசதியை கூகுள் கூடுதலாக வழங்கியுள்ளது. மாணவ மாணவியர், தங்கள் இணைய தொடர்பு இல்லாமலே தங்கள் அசைன்மெண்டுகளை மறுபரிசீலனை செய்யலாம். டிரைவ் அட்டாச்மெண்டுகளை திறக்கலாம். கூகுள் டாக்குமெண்டுகளில் அசைன்மெண்டுகளை எழுத முடியும்.
ஸ்டூடண்ட் டிராக்கிங்
ஆசிரியர்கள் மாணவ மாணவியர் தொடர்பான தரவுகளை கண்காணிக்க உதவும் டிராகிங் வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. கிளாஸ்ரூமில் மாணவ மாணவியர் சமர்ப்பித்த அசைன்மெண்டுகள், குறிப்பிட்ட நாளில் பதிவுகளில் அளித்த பின்னூட்டங்களை ஆசிரியர்கள் பார்க்க முடியும்.
ஹோம்வொர்க் பகிர்தல்
கிளாஸ்ரூம் ஆண்ட்ராய்டு செயலி, மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்களின் படங்களைத் தொகுத்து ஒரே டாகுமெண்டாக சமர்ப்பிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. சமர்ப்பிப்பதற்கு முன்பு படங்களை வெட்டுவது, திருப்புவது ஆகிய வசதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
வகுப்பை முடித்தல்
ஆசிரியர் வகுப்பை முடித்த பிறகு மாணவ மாணவியர் இணைப்பில் தொடர்ந்து இருப்பதைத் தவிர்க்கும்வண்ணம் ஒரே அழைப்பில் கூட்டத்தை முடிக்கும் தெரிவு ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஜிமீட்டில் மியூட்
மாணவ மாணவியர் தங்களை அன்மியூட் செய்து பேச முடியுமா என்பதைத் தீர்மானிக்கும்வண்ணம், எல்லா மாணவர்களையும் ஆசிரியர் மியூட் செய்யும் வசதி வருகிறது.மூன்றாம் நபர் மென்பொருள்களை பயன்படுத்தும் வசதி, ஒன்றுக்கும் மேற்பட்ட நெறியாளர்களைக் கொண்டிருக்கும் வசதி ஆகியவற்றையும் கூகுள் வழங்குகிறது.