வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜ்: ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் 8டி ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு

வருகின்ற மார்ச் மாதம் ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8டி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோவின் இரண்டு இயக்கவேக அளவுகள் கொண்ட சாதனங்கள் சந்தைக்கு வந்தன. 8ஜிபி மற்றும் 12 ஜிபி என்று இரு வகையில் அது கிடைக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பிளஸ் 8டி அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி இயக்கவேகங்கள் கொண்ட இருவகையாக விற்பனையாகி வருகிறது. தற்போது ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8டி ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் விலையையும் நிறுவனம் குறைத்துள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.78 அங்குலம் குவாட் எச்டி+ (1440X3168 பிக்ஸல்)
இயக்கவேகம்: 8 ஜிபி மற்றும் 12 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 48 எம்பி + 8 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட குவாட் ரியர் காமிரா
(எல்இடி பிளாஷ், சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சார், 119.7 டிகிரி அல்ட்ராவைல்டு லென்ஸ், டெலிபோட்டோ சென்சார் மற்றும் கலர் ஃபில்டர் கொண்டது)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 865
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
மின்கலம்: 4150 mAh
சார்ஜிங்: வார்ப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

8ஜிபி இயக்கவேகம் கொண்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ, ரூ.4,000/- விலை குறைக்கப்பட்டு, ரூ.50,999/- ரூபாய்க்கும், 12 ஜிபி இயக்கவேகம் கொண்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.55,999/- விலைக்கும் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:


தொடுதிரை: 6.55 அங்குலம் ஃப்ளூய்ட் AMOLED எஃப்எச்டி+ இயக்கவேகம்: 8 ஜிபி மற்றும் 12 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 48 எம்பி + 16 எம்பி + 5 எம்பி + 2 எம்பி ஆற்றல்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 865
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
மின்கலம்: 4500 mAh
சார்ஜிங்: 65W வார்ப் சார்ஜிங்
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்ட ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி இயக்கவேகம் கொண்ட சாதனம் ரூ.3,000/- விலை குறைக்கப்பட்டு ரூ.39,999/- விலையிலும், 12 ஜிபி இயக்கவேகம் கொண்ட ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ரூ.42,999/- விலையிலும் கிடைக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds

READ MORE ABOUT :