'சூப்பர் ஃபாலோ' என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்கில் சிறப்பு உள்ளடக்கத்தை (exclusive additional content) சேர்த்து பணம் ஈட்டலாம். எக்ஸ்ட்ரா ட்விட், குழுவில் சேர்தல் மற்றும் நியூஸ் லட்டர் என்னும் செய்தி இதழை பெறுவதற்குக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலீட்டாளர்களுக்கான மெய்நிகர் சந்திப்பில் இந்த அறிவிப்பினை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.மக்களின் பயன்பாட்டுக்கென குறிப்பிடத்தக்க மாற்றத்தை முதன்முறையாக ட்விட்டர் கொண்டுவந்துள்ளது. ஒலி பதிவுகளை மற்றும் பகிரக்கூடிய கிளப்ஹவுஸ் சமூகதளத்திற்கு போட்டியாக உரைவடிவ விவாத சேவையையும் சோதனை செய்துள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டு அறிமுகமான ட்விட்டர், 2018ம் ஆண்டுதான் முதன்முறையாக ஆண்டு லாபத்தை பதிவு செய்தது. 2023ம் ஆண்டில் வருவாய் இரட்டிப்பாகும் என்றும் ட்விட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.மிக தரமான வரவேற்பை பெறக்கூடிய பதிவுகள் இருப்போருக்கு இத்திட்டம் கவர்ச்சிகரமாக விளங்குகிறது. ஆனால் சராசரி அளவில் பதிவிடுபவர்களுக்கு இது பெரிய அளவில் பயனளிக்காது என்று சமூக ஊடக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்."நாங்கள் மெதுவாக செயல்படுகிறோம், நவீன முறை இல்லை, நம்பகதன்மை குறைவு போன்ற விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்வண்ணமாக இதை அறிமுகம் செய்கிறோம். நாங்கள் ஏன் புதுமைகளை செய்யமாட்டோம்? ஏன் நண்பர்கள் எங்கள்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது?" என்று ட்விட்டர் நிறுவனம் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார்.'சூப்பர் ஃபாலோ' வசதி இந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.