பாகுபலி பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார்.அண்மையில் பேட்டி அளித்த நாக் அஸ்வின், கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகப் படத்தின் பிரபாஸ் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டதாகவும், 2021 நடுப்பகுதியில் தொடங்கும்.
தொற்று நோய் பரவல் மற்றும் பிரபாஸின் மற்ற படங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கிய கால்ஷீட் காரணமாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மட்டுமே தனது படப்பிடிப்பு தொடங்கும். ஆதிபுருஷ் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது, பிரபாஸ் அதில் ராமராக நடிக்கிறார். அந்த படம் நாட்டின் எல்லா மூலைகளிலும் சென்றடையும். அப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் 30 சதவீதம் மேலும் உயரும். அதன்பிறகு அவருடன் ஒரு படத்தில் பணிபுரியச் சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன். ஆனால் படத் தாமதத்திற்கு இதுவே காரணம் அல்ல. இதில் அமிதாப்பச்சன் ஒரு முழு நீள முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கீதம் சீனிவாச ராவ் இந்த படக்குழுவின் வழிகாட்டியாக பணியாற்றவுள்ளார்.இவ்வாறு நாக் அஸ்வின் தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரபாஸ் ரூ 100 கோடி சம்பளம் கேட்பதாக திரைத்துறையில் தகவல் பரவி வருகிறது. ஷாருக்கான், ரஜினிகாந்த்தையும் பிரபாஸ் சம்பள விஷயத்தில் முந்தியிருக்கிறார்.பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் மார்கெட் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட எல்லா திரையுலகிலும் பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரபாஸ் நடித் துள்ள ராதே ஷ்யாம் படம் வரும் ஜூலை மாதம் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது.