ஆதார், நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் அட்டை அவசியமாயிருக்கிறது. தனி மனிதனின் அடையாளம் என்று குறிப்பிடப்படும் ஆதார் அட்டையை புதிதாக பெறுவதற்கும், ஏற்கனவே இருக்கும் விவரங்கள் மற்றும் முகவரியில் மாற்றம் செய்யவும், விரல் மற்றும் கண் பதிவுகளை செய்யவும் ஆதார் மையங்களுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
நாடு முழுவதும் அஞ்சலகங்கள், வங்கிகள், அரசு துறைகள் என்று பல்வேறு இடங்களில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆதார் மையங்களை [UIDAI (Unique Identification Authority of India)] நம்முடைய கையிலிருக்கும் மொபைல் போன் மூலமாகவே கண்டறிந்து நேரடியாக சென்று நமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தை திறக்கவும்.
மை ஆதார் செக்சன் (My Aadhaar section) என்ற பிரிவுக்குச் சென்று கெட் ஆதார் லிங் (Get Aadhaar link) என்ற இணைப்பை சொடுக்கவும்.
பிறகு லொகேட் அன் என்ரோல்மெண்ட் சென்டர் லிங்க் (Locate an Enrolment Center link) என்ற இணைப்பை சொடுக்கவும்.
இந்த இணைப்பில் மாநிலம், பகுதி, நகரம், மாவட்டம் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் (PIN code) இவற்றை பதிவிடவும்.
அவற்றை பதிவிட்ட பிறகு, Captcha என்ற குறியீட்டை உள்ளிடவும். பின்னர் லொகேட் அ சென்டர் (Locate a center) என்ற பொத்தானை அழுத்தவும்.
இதை அழுத்தியதும் குறிப்பிட்ட பகுதியில் தற்போது சேவை புரியும் ஆதார் மையங்களின் முழு முகவரி தெரியும். மேலும் அந்த ஆதார் மையம் தற்காலிகமாக இயங்குகிறதா அல்லது நிரந்தரமான மையமா என்ற விவரமும் கொடுக்கப்பட்டிருக்கும்.