ப்ரீபெய்ட் சிம் பயன்பாட்டிலும், குறைந்த விலையில் இன்டர்நெட் பயன்பாட்டிலும் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஜியோ.
`இன்டர்நெட் வசதி எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலும் குறைந்த விலையில் கிடைக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிமுகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களம் இறங்கியது ரிலையன்ஸ் ஜியோ.
டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவருவைதைக் காட்டிலும் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதே பெரும் சவலாக உள்ளது. இந்நிலையில் சமீபத்திய ஜியோ வருமானம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தாலேயே வெளியிடப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருமானம் 76.43 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 5.10 பில்லியன் ரூபாய். இது கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வருமானத்திலிருந்து பன்மடங்கு அதிகமான லாபமாம்.
ஜியோவின் அசுர வளரச்சியால் டெலிகாம் துறையில் உள்ள இதர நிறுவனங்கள் இருப்பிடம் இல்லாமல் போவதைத் தடுக்க ஆஃபர் மேல் ஆஃபர்கள் அள்ளிக் கொட்டிக்கொடுத்தாலும் ஈடுசெய்வது முடிவதில்லை!