பெண்களுக்கான பாதுகாப்பு சாதனம்: டெல்லி இளைஞர்கள் சாதனை!

by Rahini A, Jun 8, 2018, 13:02 PM IST

டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்த, பெண்களுக்கான புதிய பாதுகாப்பு உபகரணம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளது.

டெல்லி பொறியியல் கல்லூரியில் படித்துவர்கள் மாணிக் மேதா, அவினாஷ் பன்சால் மற்றும் நிகரிகா ராஜீவ். இவர்கள் லீஃப் வியரபல்ஸ் என்ற `டெக்' டீம்-ன் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் Safer Pro என்ற பெண்களுக்கான பாதுகாப்பு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பாதுகாப்பு சாதனம் 35 மில்லி மீட்டர் நீளத்தில் ஓவல் வடிவத்தில் இருக்கும். ஆபத்தில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தினால், அவர்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். மேலும், அருகில் இருக்கும் மருத்துவமனை குறித்தும் இந்த சாதனத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, மருத்துவ மாணவி நிர்பயா கொடூமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது நினைவில் இருக்கும். அவர் தான் இந்த புதிய உபகரணத்தைக் கண்டுபிடிக்க லீஃப் வியரபல்ஸ் குழுவுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சேஃபர் ப்ரோ சாதனத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. XPrize என்று சொல்லப்படும் மிகவும் மதிப்பு வாய்ந்த பரிசு இந்த டெல்லி இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.

You'r reading பெண்களுக்கான பாதுகாப்பு சாதனம்: டெல்லி இளைஞர்கள் சாதனை! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை