மலேசியாவின் க்ராடிள் ஃபண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதில் பலியாகி உள்ளார்.
மலேசியாவில் உள்ள ஸ்டார்ட்-அப் டெக் நிறுவனங்களுக்கான நிதிச் சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது கிராடிள் ஃபண்டு. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் நஸ்ரின்ஹாசன்.
இவர் கடந்த வாரம் தனது அறையில் இரவு தூங்கிக்கொண்டிருந்துள்ளார். தூங்குவதற்கு முன்னர் தன் தலைக்கு அருகிலேயே தனது இரண்டு ஸ்மார்ட்போன்களையும் வைத்துவிட்டு அதற்கு சார்ஜ் போட்டுவிட்டவாறு உறங்கியுள்ளார்.
ஆனால், நடு இரவில் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதில் அவரது படுக்கை முழுவதும் தீப்பிடித்து அந்த அறையே புகை மண்டலமாகியுள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதில் எழும்பிய புகை காரணமாக ஹாசன் சுவாசிக்க முடியாமல் மரணம் அடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மரணித்த நஸ்ரின் ஒரு ப்ளாக்பெரி போனும் ஹூவேய் மொபைல் போனும் வைத்திருந்துள்ளார். இரண்டில் எந்த போன் வெடித்தது என்பது குறித்தத் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.