UTS செயலி மூலம் முன்பதிவில்ல ரயில் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. பயணிகள் இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது
"காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கிலும், பயணிகள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் நோக்கிலும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் புற நகர் பகுதியில் மட்டும் இதில் முன்பதிவு செய்ய முடியும் என்று நிலையில் தற்போது அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த செயலியை கூகுஸ் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.