தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுக்கா அலுவலகத்தில் எந்த ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமானாலும் பணம் இருந்தால்தான் காரியம் நடக்கும் என்பதை விளக்கும் விதமாக ஊரெங்கும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த அலுவலகத்தில் வேலையின் தரத்தைப்பொறுத்து பணம் வாங்கப்படுவதாக இடது சாரி கட்சிகள் என்ற பெயரில் லஞ்சம் குறித்து திருவேங்கடம் வட்டாரத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
திருவேங்கடம் தாசில் தாரின் மாத வருமான ஐந்து லட்சம் ரூபாய் என்றும் , அவரது டிரைவரின் வருமான ஒரு லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டு அதிர வைக்கிறது இந்த போஸ்டர்.
தாலுககா அலுவலகத்திற்கு எந்த சான்று வாங்கு சென்றாலும் அதற்கு லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெறவோ,, எந்த பணியோ முடிக்கமுடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் , மாவட்ட நிர்வாகத்திடம் பலரும் புகார் அளித்தும் வழக்கம் போல எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இடது சாரி கட்சியினரின் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருவேங்கடம் வட்டத்திற்குள் சரள் அள்ள 50 ஆயிரம் ரூபாய், சப்டிவிசன் பேப்பர் 5 ஆயிரம் ரூபாய் , பிறப்பு இறப்பு, வாரிசு சான்றுதழ் வாங்க 2 ஆயிரம் ரூபாய் , , இலவச பட்டா வழங்க 10 ஆயிரம் , கல்குவாரி மாத ஆய்வுக்கு 10 ஆயிரம் , செங்கல் சூளை ஆய்வு 2 ஆயிரம் ரூபாய் என விபரமாகவே அச்சடிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திருவேங்கடம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் திருவேங்கடம் தாசில்தார் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள உயர் அதிகாரிகள், புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.