காதல் ஆசை காட்டி 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை பிடித்த ஆராய்ச்சியாளர்கள்...

17-Foot-Long Female Python-Caught In US

by Subramanian, Apr 8, 2019, 12:16 PM IST

அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உலகிலேயே மிகப்பெரிய மலைப்பாம்பு உள்ளன. முயல்கள், முதலைகள், மான்கள், ரக்கூன்கள் போன்ற விலங்குகளை மலைப்பாம்புகள் கொன்று சாப்பிட்டு விடுகின்றன. இதனால் முயல்கள் உள்ளிட்ட அந்த விலங்குகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதனை தடுக்க மலைப்பாம்புகளின் பெருக்கத்தை கட்டுபடுத்த ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் தற்போது வித்தியாசமான முறையில் 18 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை பிடித்துள்ளனர். என்ன அப்படி வித்தியாசம்ன்னு தானே கேக்கிறீங்க.
ஒரு ஆண் மலைப்பாம்பை அறுவை சிகிச்சை செய்து அதனுள் ரேடியோ டிரான்ஸ்மீட்டரை பொருத்தி வனபகுதிக்குள் விட்டனர். அந்த ஆண் மலைப்பாம்பு இனப்பெருக்கத்துக்காக பெண் மலைப்பாம்பு இருக்கும் இடத்தை தேடி சென்றது. அதன் மூலம் பெண் மலைப்பாம்பு இருக்கும் இடத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அதன்பிறகு 18 அடி நீளம் மற்றும் 84 கிலோ எடையுள்ள அந்த பெண் மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர்.மேலும் 74 முட்டைகள் முதிர்ச்சி அடையும் நிலையில் இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

You'r reading காதல் ஆசை காட்டி 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை பிடித்த ஆராய்ச்சியாளர்கள்... Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை