அமெரிக்காவின் ஆள் இல்லாத உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், இதை அமெரிக்க கடற்படை மறுத்துள்ளது.
ஈரான் அரசு, அணு ஆயுதக் குவிப்பை கைவிட வேண்டும் என்று கூறி, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதன்பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ஈரான் அதிபர் கிம் உன்னும் சந்தித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு, பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், புதனன்று இரவு அமெரிக்காவின் ஆள் இல்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் நாட்டு ராணும் அறிவித்தது. ஈரான் நாடு வான் எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்க விமானம் பறந்ததால், அதை சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் தெரிவித்தது. மேலும், சுட்டு வீழ்த்தப்பட்டது அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் ஆர்.கியூ-4 குளோபல் ஹாக் டிரோன் என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தது.
ஆனால், இதை அமெரிக்கா உடனடியாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் கடற்படைத் தளபதி பில் அர்பன் கூறுகையில், ‘‘அமெரிக்கா இன்று அந்தப் பகுதியில் எந்த உளவு விமானத்தையும்(டிரோன்) அனுப்பவே இல்லை’’என்று தெரிவித்தார். ஈரான் கடந்்த வாரம் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்றதாகவும், ஜூன் 6ம் தேதி ஒரு டிரோனை ஈரான் சுட்டுத் தள்ளியதாகவும் அமெரிக்க அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.