கஜகஸ்தானில் கட்டிடம் மேல் விமானம் மோதி விபத்து.. 14 பேர் உயிரிழப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 27, 2019, 11:46 AM IST
Share Tweet Whatsapp

கஜகஸ்தானில் ஜெட்விமானம் ஒன்று, கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

கஜகஸ்தான் நாட்டில் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 95 பயணிகள் மற்றும் 5 விமான நிறுவன ஊழியர்களுடன் இன்று காலையில் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு, தலைநகர் நூர் சுல்தானை நோக்கிச் சென்றது. அச்சமயம், பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் பலத்த சேதமடைந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 14 பேர் உயிழந்தனர். மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


Leave a reply