மாஸ்குக்கு பதிலாக மலைப்பாம்பு அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

by Nishanth, Sep 16, 2020, 20:18 PM IST

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் பஸ்சில் பபணம் செய்த ஒருவர் முகக் கவசத்திற்கு பதிலாக மலைப் பாம்பை கழுத்தில் சுற்றி வந்ததை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முகக் கவசம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் கவசம் அணிய வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இதை அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் பஸ்சில் ஏறிய ஒரு பயணி முகக் கவசம் அணிவதற்கு பதிலாக கழுத்தில் ஒரு மலைப்பாம்பை சுற்றி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ்சில் மலைப்பாம்புடன் ஏறிய அந்த நபரை பார்த்து சக பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சில பயணிகள் உடனடியாக பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். பஸ்சில் ஏறிய அந்த பயணி கழுத்தில் சுற்றியிருந்த அந்த மலைப் பாம்பை எடுத்து அங்கிருந்த கம்பியில் வைத்தார். அது அசையாமல் அந்த கம்பியை சுற்றி படுத்துக் கொண்டது. பயணிகள் இதைப் பார்த்து பீதியடைந்தனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அந்த நபர் கண்டுகொள்ளவே இல்லை.


இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் அந்த நபர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களிடையே இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியதால் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


More World News

அதிகம் படித்தவை