உலகிலேயே அமெரிக்க நாட்டில் தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவும் அதிக அளவு மரணங்களும் அமெரிக்காவில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலத்தில்கூட முகக்கவசம் அணியாமலேயே வலம் வந்தார். அதன் காரணமாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ட்ரம்புக்கும், அதனைத் தொடர்ந்து அவரது மனைவி மெலானியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . அதிபர் என்ற முறையில் அவருக்கு உயரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை முழுமையாக முடியாத நிலையிலேயே ட்ரம்ப் வெளியே வந்து ஜாலியாக வெளியே வந்து நடமாடி.. ஐயம் ஆல் ரைட் என்று சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
முழுமையான சிகிச்சை பெறாமல் முன்னதாகவே ட்ரம்ப் மருத்துவமனையை விட்டு வெளியே வந்துவிட்டதாகச் சர்ச்சையும் எழுந்தது.இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பிற்குள்ளான ட்ரம்ப்க்கு தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.