கன்னட நடிகருடன் தமிழுக்கு வரும் ராஷ்மிகாவின் செம திமிரு

படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட்.மிஷ்கின் இயக்கி வரும் 'பிசாசு 2' மற்றும் அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தற்போது 'செம திமிரு' என்ற படத்தைத் தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட்.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் 'செம திமிரு'. பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்தப் படத்தைத் தான் பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தை பி.கே.கங் காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரிக்க நந்தகிஷோர் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குத் தன் ஒளிப்பதிவால் அழகூட்டியுள்ளார் விஜய் மில்டன். 'செம திமிரு' படத்தில் சந்தன் ஷெட்டி இசையில் உருவான 'காராபோ' பாடல் நீண்ட நாட்களாக சமூக வலைத் தளத்தில் பேசப்படும் பாடலாக இருந்தது நினைவு கூறத்தக்கது.இந்தப் படம் தவிர்த்து டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றால் சமூக வலைத்தளத்தில் இப்போதும் பேசப்படும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தையும் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் மார்ச் 5-ம் தேதி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் பேசப்படும் படங்களைக் குறிவைத்து வெளியிட்டு வருகிறது ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட் நிறுவனம். அதில் தொடர்ச்சியாக வெற்றியும் கண்டு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :