டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு...

Jun 12, 2018, 08:52 AM IST

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடந்து முடிந்தது.

சிங்கப்பூரின் சென்டோசா தீவில், இந்திய நேரடிப்படி காலை 6.30 மணிக்கு சந்திப்பு தொட​ங்கியது. இரு நாட்டு அதிபர்களும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி நட்பை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பேசிய அமெரிக்க அதிபர், சிறந்த நட்புறவு என பெருமிதம் தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து பேசிய வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், பல தடைகளை தாண்டி இந்த சந்திப்பு நடைபெறுவதாக கூறினார். 

இரு நாட்டு அதிபர்களும் சுமார் 48 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.  இதனை தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில், அதிபர்கள் பேசினர். 

கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படுத்துதல், பொருளாதார தடை நீக்கம், அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்கள் பேச்சின் முக்கிய அம்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

அமெரிக்கா அதிபரை வடகொரிய அதிபர் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும். இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பால், 60 ஆண்டுகளாக நீடிக்கும் பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, வடகொரிய அதிபர்கள் சந்திப்பால் சென்டோசா தீவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தை சேர்ந்த ஆயிரத்து 800 கூர்காக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You'r reading டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு... Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை