ஒரு கோள் உருவாகிறது... வானியலில் முதன்முறையாக படப்பதிவு

by SAM ASIR, Jul 6, 2018, 23:15 PM IST
ஜெர்மனியிலுள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் பிடிஎஸ் 70பி என்ற கோளின் உருவாக்கத்தை படமாக பதிவு செய்துள்ளனர். வானியல் அறிவியல் வரலாற்றில் குறுங்கோள் ஒன்றின் உருவாக்கம் இப்போதுதான் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
 சூரியனிலிருந்து ஏறத்தாழ 300 கோடி கிலோ மீட்டர் (three billion kilometres) தொலைவில் காணப்படுகிறது. இது சூரியனிலிருந்து யுரேனஸ் கிரகம் உள்ள தூரத்திற்கு ஏறக்குறைய ஒத்தது. பிடிஎஸ் 70 பி என்ற இந்த கிரகம், வாயுவால் ஆனது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் நிறை வியாழன் கிரகத்தை போன்று சில மடங்கு உள்ளது. இதன் வெப்பநிலை 1000 டிகிரி செல்சியசாக உள்ளதால், சூரிய குடும்பத்தில் இதுவே அதிக வெப்பநிலை கொண்டதாக அறியப்படுகிறது.
 
வெகு தொலைவில் உள்ளதை காணும் தொலைநோக்கியில் [Very Large Telescope (VLT)], ஸ்பியர் என்ற கருவியை பயன்படுத்தி விஞ்ஞானிகள் பல்வேறு அலைவரிசைகளில் இந்த புதிய குறுங்கிரகத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

You'r reading ஒரு கோள் உருவாகிறது... வானியலில் முதன்முறையாக படப்பதிவு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை