நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியாவைத் தாக்கிய சுனாமி

by Manjula, Sep 29, 2018, 09:48 AM IST

இந்தோனேசியா நாட்டின் சுலவேசி தீவில் நேற்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 7 புள்ளி 5 என ரிக்டர் அளவுகோலில் பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

சுனாமி தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் மாயமாகிவிட்டதாகவும், அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் 6 புள்ளி 7 ரிக்டர் அளவிலும், 6 புள்ளி 5 ரிக்டர் அளவிலும் என அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் சுலவேசி பிராந்தியத்தின் தலைநகர் பாலுவை ஆழிப்பேரலை தாக்கியது.

சுனாமி காட்சிகள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சமடைந்ததால், சுனாமி கரையை கடந்து ஊருக்குள் நுழைந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என இந்தோனேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்திருக்கிறது.

சற்றுமுன் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 30 போ் உயிாிழந்துள்ளனர்.

You'r reading நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியாவைத் தாக்கிய சுனாமி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை