அமைதிக்கான நோபல் பரிசு காங்கோ, ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டை சேர்ந்த மகளிர் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இவர் உள்நாட்டுப் போரில் ஈடுபடும் தீவிரவாதிகளால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருபவர். தனது இளம் வயதின் பெரும் பகுதியை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிட்டதால் முக்வேஜுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதே போன்று ஈராக்கின் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இவர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டவர். ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய குர்தீஷ் இன பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்த்து உலகிற்கு தெரிவித்தமைக்காக நாடியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.