ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன், நீர் சறுக்கு விளையாட்டில் எதிர்பாராவிதமாக நடந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான குயின்ஸ்லாந்தில் வசித்து வருகிறார்.
குயின்ஸ்லாந்துக்கு அருகில் உள்ள ஸ்டார்ப்ரோக் தீவில் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றார். அங்கு தனது மகனுடன் சர்ஃபிங் எனப்படும் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மணல் குவியலில் மோதி விபத்தில் சிக்கினார்.
ஆனால், உயிருக்கு எந்தவொரு பாதிப்பும் இன்றி, முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என்றார்.