மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு

by Isaivaani, Oct 9, 2018, 08:42 AM IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம். மேலும் பணித்தளத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி, குழந்தைகளை பராமரிக்கும் ெபாறுப்பாளர், குழந்தைகளுக்கும் ஒரு கூடுதல் உதவியாளர் அமர்த்தலாம். பணித்தளப் பொறுப்பாளர் முன்அளவீட்டினை மேற்கொள்ள உதவுதல், 100க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் இருப்பின் ஒரு மாற்றுத்திறனாளியினை பணித்தள பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தலாம்.

பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) ஆழப்படுத்தும் தளத்தில் தண்ணீர் தெளித்தல், மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்தல், கரைகளை சமன்படுத்துதல், உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத்தினாளிகளை மண்வேலை, மண்மூடுதல், நீர்பாய்ச்சல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்பு பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவற்றை துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவது, ஊதியம் அளித்தது குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

மேற்கூறிய நடைமுறைகளை ஊராட்சி அளவில் பணித்தளப்பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலரும், வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்வதோடு மாவட்ட அளவில் முறையாக கண்காணிக்க வேண்டும். என திட்ட இயக்குநர், மாவட்ட ஊரகவளர்ச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நடைமுறையினை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இத்திட்ட செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்திட சிறப்பு முகாம் அமைத்து விடுபட்ட நபர்களை இத்திட்டத்தில் இணைத்து வேலை அடையாள அட்டைகளை வழங்கிடவும், அடையாள அட்டை வழங்கப்பட்ட நபர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

You'r reading மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை