குறுகிய கால ஹெச்1பி(H1B) விசா விநியோகிப்பதற்கு எதிராக, அமெரிக்க குடிபெயர்வுத்துறை மீது அந்நாட்டை சேர்ந்த வர்த்தக கூட்டமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் உருவெடுத்துக் கொண்டிருந்து இப்போது டிரம்ப் தலைமையிலான அரசின் கீழ் தீவிரம் அடைந்திருக்கிறது இந்தியர்களுக்கான அமெரிக்க குடிவரவு மற்றும் குடியுரிமை பிரச்சனைகள்.
அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான ஹெச்1பி விசா, 3 ஆண்டு காலகட்டத்திற்கு வழங்கப்படும் நிலையில், அமெரிக்க குடிபெயர்வு சேவைத்துறை அண்மையில் சில கொள்கை மாற்றங்களை செய்தது. அதன்படி, சில நாட்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு கூட எச்1பி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப சேவைத்துறை சார்ந்த லாப நோக்கற்ற வர்த்தகக் கூட்டமைப்பான ஐடிசர்வ் அலையன்ஸ் (ITServe Alliance) குறுகிய கால எச்1பி விசாக்களை விநியோகிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. எச்1பி விசாக்களின் காலஅளவை சுருக்க, அமெரிக்க குடிபெயர்வு சேவைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.