விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி உயிர் நீத்த போராளிகளை நினைவு கூறும் வகையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் இன்று மாவீரர் தினம் உணர்வுப்பூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் ராணுவத்தின் கெடுபிடிகளுக்கு இடையே மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் அங்கு உருவாகின. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னணி இயக்கமாக நிலைத்து நின்றது.
இலங்கை ராணுவத்துக்கு எதிராக வீரச்சமர் புரிந்தது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம். 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தது.
விடுதலைப் புலிகள் ஆளுமை செலுத்தி வந்த காலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதி மாவீரர் நாள் உரையை பிரபாகரன் ஆற்றுவார். அவரது மாவீரர் நாள் உரை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடுகள் அந்த உரையில் இடம்பெறும். 10 ஆண்டுகளாக பிரபாகரன் உரை இடம்பெறாத நிலையிலும் உலகம் முழுவதும் தமிழர் வாழும் தேசங்களில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாவீரர்கள் யார்? என்பது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த ஆவணப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.