ஒன்பிளஸ் அலைபேசி நிறுவனம், இந்தியாவில் அமேசான் விற்பனை இணையதளத்துடன் இணைந்து செயல்படுவதன் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
எப்போது? எங்கு?
நவம்பர் 30ம் தேதி இந்த சலுகை விற்பனை ஆரம்பமாகும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமல்ல, அனைத்து குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களிலும் இச்சலுகை கிடைக்கும்.
எவ்வளவு?
சிட்டி வங்கியின் கடன் (Credit) மற்றும் பற்று (Debit) அட்டைகளை கொண்டு ஒன்பிளஸ் 6டி வாங்கினால் 1,500 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். 6 மாத தவணையிலும் இது கிடைக்கும்.
ஏற்கனவே ஒன்பிளஸ் ரக அலைபேசிகளை பயன்படுத்திக் கொண்டிருப்போர், தங்கள் பழைய சாதனங்களை அளிப்பதன் மூலம் 3,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். ஆப்பிள் சாதனங்களை வைத்திருப்போருக்கும் இதே சலுகை உண்டு.
சிறப்பம்சங்கள்
தொடுதிரை: 6.41 அங்குலம் Optic AMOLED தரம்; 2280 X 1080 பிக்ஸல்
இயக்கம் மற்றும் சேமிப்பளவு: 6ஜிபி RAM மற்றும் 128 ஜிபி (சேமிப்பளவை அதிகரிக்கும் வசதி இல்லை)
மின்கலம்: 3700 mAh திறன் கொண்ட பேட்டரி
காமிரா: 16 எம்பி மற்றும் 20 எம்பி தரம் கொண்டவை. முன்பக்க காமிரா எக்ஸ்மோர் ஆர்எஸ் வகை சென்சார் கொண்டது.
குறுக்களவு: 8.2 மிமீ ஸ்லிம்
எடை: 185 கிராம்
விலை: 37,999 ரூபாய்