Jan 8, 2020, 09:08 AM IST
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளார் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. Read More
Jan 8, 2020, 08:56 AM IST
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. சொலெய்மணி கொலைக்கு பழிவாங்குவதாக அறிவித்த பின், ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இது. ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார். Read More
Jan 7, 2020, 22:09 PM IST
கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Jan 7, 2020, 22:03 PM IST
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கி ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாக உருவாக்கி நடித்திருந்தார் பார்த்திபன். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன். தமிழில் பார்த்திபன் நடித்த வேடத்தில் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர். Read More
Jan 7, 2020, 22:00 PM IST
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங் களுக்கு முன் முகமூடி அணிந்தவர்கள் வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கினர். Read More
Jan 7, 2020, 13:18 PM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர். Read More
Jan 7, 2020, 12:21 PM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 30 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர் Read More
Jan 7, 2020, 12:19 PM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More
Jan 7, 2020, 12:04 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் இன்று(ஜன.7) அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் ெகால்லப்பட்டார். Read More