Aug 7, 2019, 11:34 AM IST
இந்திய அரசியலில் பிரகாசமாக ஜொலித்து உச்சங்களை தொட்ட ஒரு சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் குறிப்பிடத்தக்கவர். இளம் வயதிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்த சுஷ்மா, தனது 25 வயதிலேயே அரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாகி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். அதன் பின்னர் 7 முறை எம்பியாகி, மத்திய அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டு தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்த சுஷ்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம். Read More
Aug 7, 2019, 10:00 AM IST
ஒரே வருடத்தில் மதன்லால் குரானா, ஷீலா தீட்சீத், சுஷ்மா ஸ்வராஜ் என 3 முன்னாள் முதல்வர்களை டெல்லி மாநிலம் இழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. Read More
Aug 7, 2019, 08:59 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் தலைவர்களும் சுஷ்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். Read More
Aug 7, 2019, 00:06 AM IST
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு அவர் காலமானார். Read More
Aug 6, 2019, 14:50 PM IST
ஜம்மு & காஷ்மீர் விவகாரத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தலைப்பட்சமாகவும் மத்திய அரசு செயல்படுவது தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Aug 6, 2019, 12:25 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் ஆதரவுக் குரலும் எழுந்து பெரும் குழப்பத்தில் உள்ளது அக்கட்சி. தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் இன்னும் அப்பதவியில் நீடிக்கும் ராகுல் காந்தியும் தமது கருத்தை வெளிப்படுத்தாமல் உள்ளதும் அக் கட்சியை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More
Aug 6, 2019, 11:29 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. Read More
Aug 6, 2019, 10:25 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 5, 2019, 22:20 PM IST
காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்தது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 5, 2019, 14:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். Read More