Jan 28, 2021, 18:34 PM IST
விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன்தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியிட்ட சில நாட்களில் உலக அளவில் 200 கோடி வசூல் தாண்டியது. Read More
Jan 28, 2021, 18:25 PM IST
அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பதில் சில காரணங்களால் இழுபறி தொடர்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெற்றன. சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. Read More
Jan 28, 2021, 13:19 PM IST
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 28, 2021, 13:04 PM IST
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். Read More
Jan 28, 2021, 10:25 AM IST
விவசாயிகள் பேரணியில் புகுந்து டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் கொடியை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவானார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 28, 2021, 10:21 AM IST
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் இன்று(ஜன.28) காலை நடைபெற்றது. திருச்செந்தூர் உள்பட முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காவடி எடுத்து, தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடுவார்கள். Read More
Jan 28, 2021, 10:17 AM IST
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காததால் நான் ஏமாற்றத்தில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய நேரம் கண்டிப்பாக வரும் என்று கூறுகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.சைனா மேன் பவுலர் என்று அழைக்கப்படுபவர் குல்தீப் யாதவ். Read More
Jan 28, 2021, 10:11 AM IST
தமிழ் பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இவரது சகோதரர் பவன் கல்யாண் மூவரும் அதிகபட்ச ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். Read More
Jan 27, 2021, 17:09 PM IST
இயக்குனர் ஷங்கர் படமென்றால் கண்முன் நிற்பது அவரது பிரமாண்டம் தான். ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அவரது எல்லா படங்களும் பேசப்பட்டதற்கு காரணம் அப்படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எனலாம். அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கிறார். Read More
Jan 27, 2021, 14:09 PM IST
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. Read More