May 14, 2020, 13:04 PM IST
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
May 14, 2020, 13:01 PM IST
நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. Read More
May 14, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 14, 2020, 09:42 AM IST
சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 15:50 PM IST
தமிழில் ஒரு நாள் இரவில், கண்ணுக்குள்ளே, திலகர் போன்ற படங்களில் நடித்திருப்பவர் அனுமோல். மலையாள நடிகையான இவர் மலையாளப் படங்களில் நடிக்கத் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அனுமோலின் இணைய தள பக்கத்துக்குப் பலர் ஆபாசப் படங்களை அனுப்பி அவரை கவர முயல்கிறார்களாம். Read More
May 13, 2020, 15:46 PM IST
பிரதமர் மோடி நேற்று இரவு நான்காவது லாக் டவுன் பற்றி அறிவித்தார் அவர் பேசியது சரிவரப் புரியவில்லை என்று பலரும் ஆதங்கப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களும் தங்களது அதிருபித்தியை தெரிவித்தனர்.தமிழக காங்கிரஸ் பிரமுகர் குஷ்பு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டார். Read More
May 13, 2020, 15:40 PM IST
ஹாலிவுட் படத்தில் 1954 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஜெர்ரி ஸ்டில்லர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்தார். அவருக்கு வயது 92. ஜெர்ரியின் மகன் பென் ஸ்டில்லர் தனது தந்தை இறந்த தகவல் பற்றி அறிவித்தார். Read More
May 13, 2020, 13:13 PM IST
இந்தியாவில் இது வரை 74,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2,415 பேர் பலியாகியுள்ளனர்.உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வருகிறது. Read More
May 13, 2020, 09:51 AM IST
கொரோனா ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்றும், 4வது ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். அதன் புதிய விதிகள் குறித்து மே 18ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. Read More
May 13, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 8716 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. Read More