May 2, 2020, 13:33 PM IST
கிருஷ்ணகிரியில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் இது வரை கொரோனா நோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. Read More
Apr 30, 2020, 12:32 PM IST
தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 2162 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
Apr 26, 2020, 11:11 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி, வாகனங்களில் சுற்றியவர்களிடம் ரூ.3 கோடியே 27 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. Read More
Apr 25, 2020, 14:11 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. Read More
Apr 24, 2020, 15:28 PM IST
அரசு நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கைது செய்வது என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். கோவையில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் சிம்பிளிசிட்டி என்ற ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. Read More
Apr 24, 2020, 13:52 PM IST
கொரோனா தொற்றினால் பொது மக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. Read More
Apr 24, 2020, 10:11 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :கொரானா தோற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான விதிமுறைகளும் எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் சில காலம் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன். Read More
Apr 22, 2020, 15:29 PM IST
நாடு முழுவதும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடிய இந்த தொற்று நோய் சில மாநிலங்களில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. Read More
Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 20, 2020, 15:44 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக இரண்டரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த மக்கள் கடந்த சில நாட்களாகச் சர்வசாதாரணமாக வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதுமாக உள்ளனர். Read More