Jun 22, 2019, 09:32 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது Read More
Jun 22, 2019, 09:26 AM IST
மக்களவையில் அதிமுக குழுத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.தான் என்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அனைத்து விவகாரங்களிலும் முன்னிறுத்தப்பட்டு செயல்படப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது Read More
Jun 21, 2019, 21:01 PM IST
மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார் Read More
Jun 21, 2019, 17:29 PM IST
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Jun 21, 2019, 17:19 PM IST
கர்நாடகத்தில் தனது மகன் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்தாலும் முடியலாம். சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யமில்லை. தற்போது காங்கிரசின் போக்கை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. எல்லாமே காங்கிரசின் கையில்தான் உள்ளது முன்னாள் பிரதமர் தேவகவுடா புலம்பியுள்ளார் Read More
Jun 21, 2019, 14:03 PM IST
அசைவப் பிரியர்களுக்கு பிடித்த ஆட்டு ஈரல் கிரேவி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 21, 2019, 14:12 PM IST
வெள்ளை சாதத்திற்கு ஏற்ற முருங்கைக்காய் கார குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 21, 2019, 13:47 PM IST
வீட்டிலேயே சுவையான வெஜ் கீமா மசாலா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 21, 2019, 13:38 PM IST
மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். Read More
Jun 21, 2019, 12:57 PM IST
சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு பெறும்வரை இயக்க கூடாது என காவல்துறை கறாராக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டது Read More