Jul 19, 2019, 22:51 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்தும் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் விவாதம் இரவு வரை நீடித்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல், திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் குமாரசாமி அரசு மேலும் 2 நாட்களுக்கு தப்பிப் பிழை Read More
Jul 19, 2019, 20:42 PM IST
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 19, 2019, 14:35 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்து விட்டது.சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று கூறி, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் இன்றைக்குள் வாக்கெடுப்பு நடைபெறுமா? ஆளுநர் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. Read More
Jul 19, 2019, 11:09 AM IST
கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நூறு பேர் இரவு முழுவதும் தங்கினர். மசாலா ேதாசை, தயிர் சாதம் என்று கிடைத்ததை சாப்பிட்டு விட்டு, தரையிலேயே படுத்து உறங்கினர். Read More
Jul 19, 2019, 09:19 AM IST
கர்நாடக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். கொறடா உத்தரவு, எம்எல்ஏக்கள் கடத்தல் போன்ற சட்டப் பிரச்னையை கையில் எடுத்து காலதாமதம் செய்யும் ஆளும் தரப்பு, ஆளுநரின் உத்தரவுக்கு பணிந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமா? என்ற கேள்வி எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் நாடகமே அரங்கேறி வருகிறது. Read More
Jul 18, 2019, 21:18 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் வரை பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jul 17, 2019, 15:08 PM IST
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக நெருக்கடி முற்றியுள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கே அதிகாரம் என்று தீர்ப்பு வாசிக்கப்பட, காங்கிரஸ், பாஜக, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்போ, ஆளாளுக்கு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கருத்து கூறி வருகின்றனர். Read More
Jul 17, 2019, 11:52 AM IST
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் , சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தத் தீர்ப்பு, முதல்வர் குமாரசாமி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். Read More
Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 15, 2019, 20:33 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும்.தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More