Jun 28, 2020, 18:16 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலகினர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 28, 2020, 15:17 PM IST
சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் தும்பி துள்ளல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ஸ்ரேயா கோஷல், நகுல் அபயங்கர் பாடி இருக்கின்றனர். Read More
Jun 28, 2020, 14:50 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன, இதனால் முற்றிலும் முடிந்து ரிலீஸ் செய்ய முடியாமல் பல படங்கள் முடங்கி உள்ளன. நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் இதனால் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது. பெரிய படங்கள் தியேட்டர் திறப்புக்காகக் காத்திருந்தாலும் சில படங்கள் ஒடிடிதளத்தில் வெளியாகிறது. Read More
Jun 28, 2020, 14:45 PM IST
கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! Read More
Jun 28, 2020, 14:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jun 28, 2020, 12:38 PM IST
விஜய்சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப் பட்டாய் படத்தை இயக்கிய கோகுல், கொரோனா சம்பவங்களை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றிய அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டார். படப் பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அப்படம் பற்றிய டைட்டில் டீஸர் ஒன்றை வெளியிட்டார். Read More
Jun 28, 2020, 12:07 PM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் தனது படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய புகைப்படத்தில், ஸ்ருதி ஹாசன் தனது பிறப்பு அடையாளமாகத் தனது கண்களில் ஒன்றில் குளோஸப்பில் காட்டி அதில் உள்ள வடுக்களை ரசிப்பதாகக் கூறி உள்ளார். Read More
Jun 28, 2020, 12:02 PM IST
1921 மலபார் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட படமாக நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் ஆஷிக் அபு ஆகியோர் அடுத்துவாரியம் குன்னன் என்ற படத்தில் இணைவதாக அறிவித்தனர். இப்போது, அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரமீஸ் தற்காலிகமாகப் படத்திலிருந்து விலகியுள்ளார். Read More
Jun 28, 2020, 11:52 AM IST
சிபி நடித்த வால்டர் மற்றும் அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் அழைப்பாளராக பங்கேற்றவர் சனம் ஷெட்டி. Read More
Jun 28, 2020, 11:29 AM IST
சக்ரா படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. Read More