மைக்ரேன் ஏன் வருகிறது? என்ன செய்யலாம்?

by SAM ASIR, Feb 23, 2021, 18:27 PM IST

மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி என்பதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே அதன் வேதனை தெரியும். மைக்ரேன் என்பது நரம்பியல் தொடர்பான ஓர் உடல்நலக் குறைவாகும். தீவிரமான, குறையாத தலைவலி, மைக்ரேன் வகையை சேர்ந்ததாக இருக்கக்கூடும். குமட்டல், வாந்தி, பேசுவதில் சிரமம், மரத்துப்போன உணர்வு, வெளிச்சத்தை பார்க்க இயலாமை, சத்தத்தைக் கேட்க இயலாமை ஆகியவனவும் இதன் துணை தொந்தரவுகளாக வந்து சேரும்.

மைக்ரேன், பொறுத்துக்கொள்ள இயலாத ஒரு வலி என்றாலும் அதன் மூலம் நம் உடலில் ஏதோ சரியில்லை என்ற செய்தியை நமக்குத் தெரிவிக்கிறதாக உள்ளது. அதை உடனடியாக கடந்து செல்ல மாத்திரை உதவக்கூடும். ஆனால், அது நிரந்தரமான தீர்வாக அமையாது.மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி நம்மை தாங்குவதற்கான காரணங்கள்
அசிடிட்டி (அமிலத்தன்மை) நம் உடலில் அமிலத்தன்மை அதிகரித்தால், அது ஒற்றைத் தலைவலி வருவதற்குக் காரணமாகிறது. மது, நாள்பட்ட பாலாடைக்கட்டி, நைட்ரேட் மற்றும் மோனோசோடியம் குளூக்கோமேட் போன்ற உணவு பதப்படுத்த உதவும் வேதிப்பொருள்கள், செயற்கை இனிப்பூட்டிகள், சாக்லேட்டுகள், பால் பொருள்கள் உள்ளிட்டவை சிலருக்கு ஒற்றைத் தலைவலியை தூண்டிவிடுகின்றன.

ஹார்மோன் மாறுபாடு

மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் அளவில் ஏற்படும் சமநிலை குலைவு மைக்ரேனை தூண்டும். மாதவிடாய் நெருங்கும் நேரம் அல்லது மாதவிடாய் சுழற்சி காலத்தின் நடுப்பகுதியில் மைக்ரேன் வரக்கூடும்.

வயிற்றுக்கோளாறு

ஹார்மோன் அளவை சீராக்குதலிலும், நச்சுப்பொருள்களை அகற்றுவததிலும் நம் வயிறு முக்கியப் பங்காற்றுகிறது. வயிற்றில் கோளாறு இருப்பவர்கள் மைக்ரேனால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

நீர்ச்சத்து

உடலில் போதிய அளவு நீர் இல்லையென்றால் அது அமிலத்தன்மையை (அசிடிட்டி) உருவாக்கி, மலம் கழிப்பதில் சிக்கலை உண்டாக்கும். ஒழுங்காக மலம் கழிக்காதவர்களுக்கு மைக்ரேன் இலவச இணைப்பாக கிடைக்கக்கூடும்.

தீவிர மன அழுத்தம்

மன நலம் சரியில்லையென்றாலும் ஒற்றைத் தலைவலி வரக்கூடும். அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளானோர் இதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். மன அழுத்தத்தின் காரணமாக உறக்கமின்மை, சுவாச கோளாறு, செரிமான பிரச்னை ஆகியவை ஏற்படும். கடைசியில் மைக்ரேன் வரும்.

ஒற்றைத் தலைவலியை தவிர்ப்பது எப்படி?

நான்கு அல்லது ஐந்து மிளகை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அவற்றை சாப்பிடலாம்.தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் சீமை சாமந்தி டீ (chamomile tea) அருந்தலாம்.சிறிய இஞ்சி துண்டை மெல்லலாம் அல்லது இஞ்சி டீ அருந்தலாம்.
ஹதபாதாசனம், சேது பந்தாசனம், பாலாசனம், விபரீத கரணி, சுத்த பாத ஹாசனம், மரிஜாரியாசனம், சவாசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் நல்ல பலன் தரும்.
மூச்சுப் பயிற்சி என்னும் பிரணாமயம் செய்யலாம்.மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்யலாம்.தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று குறிப்பிட்ட நேரம் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.லாவண்டர், இஞ்சி, பெப்பர்மிண்ட் என்று ஏதாவது ஒரு வாசனை எண்ணெயை கோல்பிரஸ்ட் தேங்காயெண்ணெய் போன்று எண்ணெயில் சிறிது கலந்து வலி இருக்குமிடத்தில் தடவி மென்மையாக அழுத்தினால் (மசாஜ்) வலி குறையும்.

You'r reading மைக்ரேன் ஏன் வருகிறது? என்ன செய்யலாம்? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை