Jul 18, 2019, 21:18 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் வரை பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 15, 2019, 20:33 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை கோரும்.தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மும்பையில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஹோட்டலிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More
Jul 15, 2019, 15:06 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர். Read More
Jul 14, 2019, 12:37 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்தது பாஜக வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. குமாரசாமியின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத பாஜக தரப்பு குழம்பிப் போயுள்ளதாகவும், குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைக்கும் எடியூரப்பாவின் பகீரத முயற்சிகளுக்கு, பாஜக எம்எல்ஏக்கள் பலரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Jul 12, 2019, 14:28 PM IST
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். Read More
Jul 12, 2019, 13:57 PM IST
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Jul 11, 2019, 17:13 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. Read More
Jul 11, 2019, 13:33 PM IST
தங்கள் ராஜினாமா தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் முன் இன்று மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகுமாறு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 11, 2019, 12:11 PM IST
கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலைவீசும் பாஜகவைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More