சட்டசபை இடைத்தேர்தல்: திமுக 14-ல் ஜெயிக்கும்... அதிமுகவுக்கு 3.. மீதி...? - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெறுமாம். 5 தொகுதிகள் இழுபறியாகும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது Read More


கருத்துக் கணிப்பை 'திணிப்பு' என்ற எடப்பாடி..! மக்களின் 'மனநிலை' என்ற ஓபிஎஸ்...! யார் சொல்றது சரி..? லடாய் ஆரம்பம் !

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது Read More


கருத்துக் கணிப்பு வதந்தி..மோசடி... பொய்... காங்கிரசார் சோர்ந்து விடாதீர்..! பிரியங்கா காந்தி உருக்கமான ஆடியோ!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது ஒரு மோசடி வேலை .. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட்டு சோர்வடைந்து விட வேண்டாம் என உருக்கமாக பேசும் ஆடியோ ஒன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More


மோசடி கருத்துக் கணிப்பை புறந்தள்ளுங்க... ஓட்டு எண்ணிக்கையில கவனமா இருங்க...! உஷார்படுத்தும் டிடிவி தினகரன்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ள நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளி வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியினரை உஷார்படுத்தியுள்ளார் Read More


கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்... ஓட்டு மிஷினை மாற்ற பாஜக திட்டம்... எச்சரிக்கும் மம்தா!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகளை நம்ப வேண்டாம். முன்னரே இப்படி ஒரு கணிப்புகளை வெளியிடச் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது பாஜக என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். Read More


பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்..! நியூஸ் 18 டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Read More


யாருக்கு எத்தனை இடங்கள் ..? நாளை கருத்துக் கணிப்பு முடிவுகள்..! பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் நிறுவனங்கள்..!

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன. Read More


இனி 40 நாட்களுக்கு கருத்துக் கணிப்புகளுக்கு 'நோ பெர்மிஷன்'

முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More


தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகம்... லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. Read More


ஏப்ரல் 9-ந்தேதி மாலை வரை தான் தேர்தல் கருத்துக்கணிப்பு, மே19 வரை கூடாது - தமிழக தேர்தல் அதிகாரி

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More