வேளாண் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததை தொடர்ந்து இன்று விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக 23ம் தேதி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 12 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
டெல்லியை நோக்கி பேரணி நடத்தும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் எப்படி விளையும் என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என சிவராஜ்சிங் சவுகான் கிண்டலடித்துள்ளார்.