ஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றால், ஹெச்.டி. டி.வி இலவசமாகத் தரப் போவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், ஜியோ பைபர் பிராட்பேண்ட் சர்வீஸ், அடுத்த கட்டமாக இன்டர்நெட் மூலமாகவே டி.வி. பார்க்கும் வகையில் இணைப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் புதிய அறிவிப்பாக பிராட்பேண்ட் இணைப்புக்கு ஆயுள்சந்தா கட்டுபவர்களுக்கு இலவசமாக ஹெச்.டி.(ஹைடெபனேஷன்) தரத்தில் இலவசமாக டி.வி. மற்றும் செட்டாப் பாக்ஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது.
இது தவிர, மாதச் சந்தா ரூ.700ல் துவங்கி பல ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும்வகையில் பல்வேறு சேவைகளையும் வழங்க உள்ளது. ஏற்கனவே ஜியோ பைபர் பிராட்பேண்ட் சர்வீசில் இலவச அழைப்புகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவைகள் வழங்குவதால், ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் விலகி விட்டனர்.
இதனால், இந்த நிறுவனங்கள் கடும் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, ஜியோ பைபர் பிராட்பேண்ட் மூலம் மக்கள், டி.வி. பார்ப்பதற்கு தொடங்கி விட்டால், ஏர்டெல், டாடா ஸ்கை போன்ற டி.டி.எச் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது.