பொன்னியின் செல்வனில் த்ரிஷா! அப்போ ஐஸ்வர்யா ராய் இல்லையா?

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்த நந்தினி கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் வர இருப்பதால், பல முன்னணி நடிகர்களிடமும் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இறுதிப்பட்டியல் ரெடியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க காத்துக் கிடக்கிறார்.

முதலில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பின்னர் அவரது கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்த ரோல் சிம்புவுக்கு மாற்றப்பட்டு, பின்னர் அவர் நடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு, கடைசியில் கார்த்தி அந்த ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது என்ற செய்திகள் வெளியாகின.

ஆதித்த கரிகாலராக விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவியும் நடிக்க உள்ளதாகவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

பூங்குழலியாக நயன்தாரா மற்றும் குந்தவையாக கீர்த்தி சுரேஷ் என்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆனால், இதுவரை பார்த்திபன், ஜெயராம், விக்ரம் மட்டுமே பொன்னியின் செல்வனில் நடிக்க உள்ளதை நேரடியாக அறிவித்துள்ளார்கள். ஆனால், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக அவர்கள் பெயர் கூட இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற நிலையில், தற்போது, த்ரிஷாவிடம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

த்ரிஷாவுக்கு வில்லி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் என்பதால், நந்தினி வேடத்தில் நடிக்கத்தான் த்ரிஷாவிடம் அணுகியுள்ளதாகவும், ஐஸ்வர்யா ராய் கால்ஷீட் பிரச்னை இழுபறியாக உள்ளதால் மணிரத்னம் த்ரிஷாவை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக எடுக்கப்படுவதாக சொல்லப்படும் பொன்னியின் செல்வன் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எப்ப தான் வரும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
hanshika-undergone-a-surgery-for-reducing-fat
உடல் இளைத்த ஹன்சிகா,. அறுவை சிகிச்சை காரணம்..
comedy-actor-sathish-got-engaged
காமெடி நடிகர் சதிஷ் இனி கமிட்டட்!
director-vzdurai-is-to-direct-simpu-and-vijay-antony-films-soon
சிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை
sivakarthikeyan-scifi-movie-resume-in-november
சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்திற்கு என்ன ஆச்சு தெரியுமா?
biggboss-season-4-anchor-name-revealed
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா?
happy-birthday-atlee
ஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே!
is-nayanthara-will-attend-syera-audio-launch
பிகிலுக்கு பை சொன்ன நயன்தாரா.. சைராவுக்காவது ஹாய் சொல்வாரா?
sangaththamizhan-trailer-released
சங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு டபுள் ஆக்ஷனா?
bigil-juke-box-released
இதுக்கு எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணி ஆடியோ லான்ச் பண்ணீங்க?
world-famous-lover-first-look-released
என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க?
Tag Clouds