மிண்டும் பேய் படத்தில் நயன்தாரா - வில்லன் யார் தெரியுமா?

by Mari S, Sep 5, 2019, 13:04 PM IST
Share Tweet Whatsapp

அவள் பேய் படத்தை இயக்கி மிரட்டிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

மாயா, டோரா, ஐரா படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் மூவியில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்யுடன் பிகில் மற்றும் ரஜினியுடன் தர்பார் என பெரிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா தனக்கான தனி படங்களிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் படம், ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு சவால் விடும் ரீதியில் எடுக்கப்பட்டிருந்ததாக பாராட்டுக்கள் குவிந்தன.

அந்த படத்தை இயக்கியவர், மணிரத்னத்தின் உதவி இயக்குநரான மிலிந்த் ராவ். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகவுள்ள புதிய ஹாரர் மூவியில் தான் நயன்தாரா நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

மேலும், இந்த படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணிய இயக்குநர், பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் கென்னியை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்.

ராக் ஆன், ரைஸ் ஆஃப் ஜாம்பி போன்ற ஹாரர் படங்களில் நாயகனாக நடித்துள்ள லூக் கென்னி, சமீபத்தில் நெட்பிளிக்ஸில் கலக்கி வரும் சேக்ரட் கேம்ஸ் வெப் தொடரில் அட்டகாச வில்லனாக மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அவள், மாயா படங்களை விட பயங்கரமாக இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply